

சிவாயவசி
சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம்;
சிவாயவசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம்!
சிவாயவசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம்!
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே!
"ஸ்ரீ சிவவாக்கிய சித்தர்"
மகான் திரு இறைமுடிமணி

திரு இறைமுடிமணி மகான் அவர்கள் சித்தயோக பயிற்சியில் ஆழ்ந்த அறிவும், அனுபவ ஞானமும் நிறைந்த எளிமையான மிகவும் அன்பான சித்தயோகி ஆவர்.
ஐயா அவர்கள் சித்தயோகத்தை அனைவருக்கும் அளிக்க ஆவல் கொண்டு அதன் பொருட்டு சித்தயோக ஆராய்ச்சியிலும் வெற்றி பெற்று, பாமரரும் அறியும் வண்ணம் எளிய பயிற்சி முறைகளை வரையறுத்து, அந்த பயிற்சிகளை எண்ணற்ற சீடர்களுக்கு பயிற்றுவித்து அவர்களின் ஆன்மீகத் தேடலுக்கு அச்சாணி இட்டவர்.
தனது சீடர்களின் அன்பிற்கிணங்க தற்போது "தமிழ் சித்தயோக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை" உருவாக்கி, அதனுடைய பாடத்திட்டங்களை வரையறுத்து, இந்த சித்தயோகத்தை, சாதி, மத, மொழி, நாடு எனும் வேற்றுமை கடந்து அனைவரும் பயன் பெற்று ஆனந்தமாய் வாழ அருள் புரிந்தவராய், இம்மானிடம் வாழ தம்மை அர்ப்பணித்த சித்தயோகியாவர்.
சித்தயோகம்
சித்தயோகம் என்பது ஒவ்வோரு சித்த புருசரின் அடிப்படை கேள்விகளான;
1. பிறவி பெரும் பயன் என்ன என்று அறிவது? மற்றும்
2. இறைவனை உயிருள்ள போதே உணர்ந்து அறிவது?
அவ்விதம் அறியும் கால் பிறவாவரம் அல்லது இறவாவரம் வேண்டிப் பெறலாம்.
இவற்றை "சரியை, கிரியை, யோகம், ஞானம் மற்றும் தொன்னுற்றாரு தத்துவம்" முலமாக "தன்னை தான் அறியும்" அகமுக பயிற்சியே சித்தயோக பயிற்ச்சி ஆகும்.
இதனை குருவழி நடத்துதல் மூலம் அறிந்தபின், ஒவ்வொருவரும் பெறும் இறை அனுபவங்கள் பலவாகும்.
சூட்சும சரீரம் பெற்று அதனை அனுதினமும் தூய்மையாக்கி, முறைபடுத்தபட்ட பாதையில் வர, இறை பயணத்தில் நாம் அங்கமாகி, தாய் தந்தை மறவாது, மனைவி குழந்தை மறவாது பிறவாவரம் மற்றும் இறவாவரம் பெற்று ஆனந்தநிலை பெறுவதே முழுமையான சித்தயோகம் ஆகும்.

முறையியல்
ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன் ஐந்தும்
வென்றான் தன் வீரமே வீரமாம் - என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப் பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்!
"ஔவையார்"

சரியை
கர்மாவை தூய்மையாக சரிவர செய்தல்.

கிரியை
கோயில் என்னும் ஒரு வழிபாட்டு தலம், கடவுள், தெய்வம், வாகனம், பலிபீடம் என்றால் என்ன என்று தேடுதல்.

யோகம்
இறை அனுபவம் பெற பல யோகிகளால் கூறப்பெற்ற ஒரு முறை படுத்தப்பட்ட வழிமுறை.

ஞானம்
மேற்கூறிய வழிமுறைகளால் மனம், உடல், உயிர் அடைய பெரும் சித்தர் கல்வி எனும் தூய அனுபவங்கள்.

ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியம்
ஒரு யோகி மட்டுமே பிராணாயாமம் [யோகம்] செய்வதன் மூலம் மோக்ஷத்தைப் பெற முடியும்.
68, Peelamedu, Kalluri Nagar, Annanagar, Coimbatore.
Tamil Nadu Pin-641004.
+91 96003 81222
